ETV Bharat / state

ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து 12 பவுன் நகை கொள்ளை! - crime news in tamil

திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு அரசுப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர்கள், 12 சவரன் நகையைக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 sovereign jewellery robbery in thanjavure
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகை கொள்ளை!
author img

By

Published : Nov 6, 2020, 10:59 PM IST

தஞ்சாவூர் : மகர்நோன்பு சாவடி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் மனைவி ராதிகா கிறிஸ்டியானா, திருச்சியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார்.

வழக்கம் போல் இவர் வேலை முடிந்து திருச்சியிலிருந்து தஞ்சைக்கு அரசு பேருந்தில் இன்று (நவ.06) சென்றுள்ளார். இந்நிலையில், தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அவர் நகர் பேருந்துக்குச் செல்லும்போது தனது உடைமைகளை பரிசோதித்தபோது, தான் வைத்திருந்த 12 பவுன் நகை, செல்போன், 600 ரூபாய் பணம் ஆகியவை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தொடர்ந்து, இதுதொடர்பாக ராதிகா கிறிஸ்டியானா அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கார்பெண்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.