கும்பகோணம்: விடுதலை சிறுத்தைகள் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் தஞ்சை மாவட்ட அமைப்பாளராக அலெக்ஸ் என்பவர் இருந்து வருகிறார். வழக்கு தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றம் சென்ற அவர், ஜீப்பை வெளியே நிறுத்தியுள்ளார்.ஆனால் எதிர்பாராத வகையில் ஜீப் தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற கும்பகோணம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும் ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது., இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அலெக்ஸின் ஆதரவாளர்கள் சிலர், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக பிரமுகரான சேவல் ராஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தான் ஜீப் தீ பிடித்து எரிந்ததற்கு காரணம் என கருதி , அவர்களின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்த ஆட்டோவையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இரண்டு நீட் தேர்வு மையங்களுக்கு ஒரே பெயர் - குழம்பிய தஞ்சை மாணவர்கள்!