தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் நிறுவனர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொள்ள வருகை தந்திருந்தார். அப்போது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சரை முற்றுகையிட்டு 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கல்லூரிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் பின்பக்க வழியே வெளியேறினார். எனினும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் மன்னிப்பு கோரவும், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, இந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து 25 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: கோழியிலிருந்து மீனுக்கு படையெடுக்கும் மக்கள்