ETV Bharat / state

ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் அணைகள் பலப்படுத்தும் பணி தீவிரம் - திருக்காட்டுப்பள்ளி

தஞ்சாவூர்: கல்லணை, திருக்காட்டுப்பள்ளி அணைகளை நபார்டு வங்கி உதவியுடன் ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் அணைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

author img

By

Published : Apr 20, 2021, 1:26 PM IST

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் களிமண், மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை பல நூறு ஆண்டுகளாக பாதுகாப்புடன் இருந்துவருகிறது. அதனைப் பாதுகாக்கும்பொருட்டு தற்போதைய தமிழ்நாடு அரசு மராமத்துப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

கல்லணை பாலத்தைப் பாதுகாக்கவும், திருக்காட்டுப்பள்ளி பாலத்தைப் புதுப்பிக்கவும் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் கல்லணையிலிருந்து 17/2 முதல் 26/6 வரை சுமார் ஒன்பது மைல் தூரத்திற்கு உள்ள கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, திருக்காட்டுப்பள்ளி காவிரி, குடமுருட்டி ஆற்றில் மதகு, பில்லர்கள், பாலத்தைப் பலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் அணைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

காவிரியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி இடையில் உள்ள 6 வாய்க்கால்களின் மதகுகள் புதுப்பிக்கப்படவுள்ளன. 13 சின்ன மதகுகளும் மராமத்துச் செய்யப்பட்டு 13 சிறிய தடுப்புகள் கட்டப்படவுள்ளன. இதனைத்தொடர்ந்து, பூண்டி அருகே காவிரி ஆற்றில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் பொருட்டு தடுப்பு அணை கட்டப்படுகிறது.

மேலும் காவிரி ஆற்றின் இருபுற கரைகளிலும் சிறிது தூரத்திற்குத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு கரை அரிப்பைத் தடுக்கும்விதமாக அமைக்கப்படுகிறது.

கல்லணைக்கு வரும் தண்ணீர் போக்கினால் பாலம் பாதிக்காத வண்ணம் உள்ள எட்டு முன்கூட தடுப்புச் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. காவிரி கரை ஓரங்களில் இருபுறமும் உள்ள கோயில் அடிவாய்க்கால், பிள்ளை வாய்க்கால்கள் புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. காவிரி, வெண்ணாற்றில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு உரிய தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் கீழ் தளங்களும், மேல் தளங்களும் புதுப்பிக்கப்பட்டு பாலத்திற்கு அடியில் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

வெண்ணாற்றின் குறுக்கே உள்ள அடப்பன்பள்ளம் சைமன் பழுதடைந்துள்ளதால் இடித்துவிட்டு புதிய குழுமி அமைக்கப்படுகிறது. இதற்கு உரிய திட்ட வரையறை என்.ஐ.டி. கல்லூரியில் கேட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுத்ததும் அந்தப் பணி தொடங்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் கல்லணை காவிரியாற்றில் நடைபெற்றுவரும் பணிகளை தஞ்சை காவிரி வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் ஆய்வுசெய்தார். உதவி பொறியாளர் திருமாறன், பொதுப்பணித் துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு-கர்நாடகா இடையே இரவு நேரப் போக்குவரத்து ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.