ETV Bharat / state

பொய் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் - மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி

12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த கொண்ட விவகாரத்தில் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வரும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Cpm party leader balakrishnan
Cpm party leader balakrishnan
author img

By

Published : Jan 29, 2022, 2:14 AM IST

தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாணவி தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது. ஆனால் மாணவியின் மரணத்தை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது.

மதமாற்ற வற்புறுத்தலால் தான் மாணவி தற்கொலை செய்தார் என கூறி அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. கிறிஸ்தவ மிஷினரி சார்பில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது பா.ஜ.க. ஏற்படுத்தி உள்ள பிரச்சனையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தன்னுடைய பிரச்சனை குறித்து பெற்றோரிடம் கூறாமல் யாரோ ஒரு நவரிடம் கூறியது ஏற்புடையதாக இல்லை. சொல்லப் போனால் அந்த நபர் எடுத்த வீடியோ கூட உண்மையா என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருப்பினும் அதில் பேசியது மாணவியின் குரல் தானா என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.

அதற்குள் மற்றொரு வீடியோ வெளிவந்துள்ளது. இன்னும் இதுபோன்று எத்தனை வீடியோக்கள் வரும் என தெரியவில்லை. மாணவி மரணத்தை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். ஒரு படித்த ஐ.பி.எஸ். அதிகாரி செய்யும் வேலையா இது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணைக் குழு என்று 4 பேரை நியமித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டை கொச்சைப்படுத்தி, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்தே மத மோதலை தேசிய அளவில் பாஜக கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

இவர்கள் மாநில அரசை மீறி எப்படி விசாரணை குழு அமைக்கலாம். தூய இருதய பள்ளியானது 162 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து உள்ளனர். இதில் அனைத்து மதத்தினரும் படித்து உள்ளனர். தற்போதும் படித்து வருகின்றனர். இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை. தற்போது மதமாற்ற பிரச்சினை வந்துள்ளது புரியாத புதிராக உள்ளது. எனவே காவல்துறை தீவிர விசாரணை நடத்தி உண்மைத் தன்மையைக் வெளிக்கொண்டுவர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரயில்வே தேர்வு குளறுபடி - விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.