தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பேராவூரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இரவு பகல் என இடைவிடாது பெய்த மழையினால் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள நீலாவதி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதுமட்டுமின்றி அதே பகுதியிலுள்ள ஹோட்டல் மற்றும் டீக்கடைகளும் இடிந்து சேதமடைந்துள்ளது.
மேலும் கூப்புளிக்காடு பகுதியில் உள்ள ஜோசப் என்பவரின் வீடும் இடிந்து விழுந்துள்ளது. மேலும் வீட்டின் கூரைப் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து சேதமடைந்த பகுதிகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!