தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரை, மணக்கரம்பை, செங்கிப்பட்டி, புதுக்குடி ஆகிய ஊர்களில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. ஆனால் இதனை மீறி அப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் மது விலக்கு, கலால் உதவி ஆணையர் தவச்செல்வம் தலைமையில் கோட்ட காவல் அலுவலர் வெங்கடேஷ்வரன், அலுவலர் அருள்சாமி ஆகியோர் வெண்ணாற்றங்கரை, மணக்கரம்பை, செங்கிப்பட்டி, புதுக்குடி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 165 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 165 மதுபான பாட்டில்களின் மதிப்பு இருபதாயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.