ETV Bharat / state

மின்கசிவால் தீ விபத்து: எரிவாயு உருளை வெடித்து குடிசை வீடு நாசம்! - மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து

தஞ்சை: பட்டுக்கோட்டையருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் விவசாயி ஒருவரின் வீட்டிலிருந்த பொருள்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.

hut house burned in fire short cirucite accident  மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து  பட்டுக்கோட்டையருகே தீ விபத்து
தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான குடிசை வீடு
author img

By

Published : Mar 10, 2020, 8:03 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குள்பட்ட கொள்ளுக்காடு புதுநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மின்கசிவின் காரணமாக நேற்று அவருடைய குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தத் தீ விபத்தின்போது வீட்டிலிருந்த எரிவாயு உருளை பலத்த சத்தத்துடன் வெடித்து வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான குடிசை வீடு

இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இதையும் படிங்க: கடப்பாக்கம் கடற்கரையில் மாசி மாத தீர்த்தவாரி திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.