ETV Bharat / state

மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரிழப்பு - tanjore latest news

தஞ்சாவூர்: திருவையாறு அருகே மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரிழப்பு
மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரிழப்பு
author img

By

Published : Apr 24, 2021, 1:57 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அம்மன்பேட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர்கள் வேங்கடம்- அம்சவல்லி தம்பதி. இவர்களுக்கு கோவிந்தராஜ், தர்மராஜ், ராஜா, ராஜ்குமார் ஆகிய மகன்களும், சித்ரா, ஹேமா ஆகிய மகள்களும் உள்ளனர்.

அம்சவல்லி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைக்கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது மனைவியின் உடலைக் கண்டு திருவேங்கடம் கதறி அழுது கொண்டே திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது நாடித்துடிப்பைச் சோதித்துப் பார்த்தனர். அப்போது நாடித்துடிப்பு இல்லாததால் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளின் நேசம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.