ETV Bharat / state

தம்பதி தற்கொலை: பரிதவிக்கும் இரண்டு வயதுக் குழந்தை! - suicide

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே இரண்டு வயதுக் குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதி: பறிதவிக்கும் இரண்டு வயது குழந்தை!
author img

By

Published : Apr 25, 2019, 7:31 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் சமையல்காரராக பணியாற்றி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு நரேஷ்மதன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.

நேற்று காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், குழந்தையின் அழுகுரல் மட்டும் வீட்டிற்கு வெளியே கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலமுருகன் தூக்கிட்டும், அருணா விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தஅக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், சடலங்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

தஞ்சாவூர் ஏப் 24 

2வயது ஆண் குழந்தையை விட்டு விட்டு கணவன் மனைவி தற்கொலை தஞ்சை அருகே தாராசுரதில் நிகழ்ந்த சோகம்

தஞ்சை மாவட்டம்

 தாராசுரம்  சேர்ந்தவர் சேதுராமன் மகன் பாலமுருகன் வயது 36 இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.

 இந்த நிலையில் இவரது மனைவி அருணா இவர்களுக்கு

நரேஷ்மதன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது, இவர்களுக்கு

திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாலும்

 அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளனர்

 அப்போது பாலமுருகன் வீட்டின் ஜன்னலில் தூக்கு மாட்டி கொண்டதும்  அருகில் அவரது மனைவி அருணா பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்த நிலையில் பரிதாபமாக இறந்த நிலையில் கிடந்துள்ளனர், உடனே அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில்

கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்கு  அனுப்பிவைத்தனர் இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து கந்துவட்டி பிரச்சனையா, வேறு ஏதேனும் கருத்து வேறுபாடா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Attachments

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.