ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல்

author img

By

Published : Mar 31, 2023, 4:50 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள், இயற்கை பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு அடையாளமாகவும் அதனை நிலைபடுத்துவதற்கும் வழங்கப்படுகிறது. இது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும், உயர்ந்த தரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

முன்னதாக தமிழ்நாட்டில் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருந்த நிலையில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று இந்தியாவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

தஞ்சாவூரில் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசால் புவிசார் குறியீடு பதிவு செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல் சிற்பம், சோழவந்தான் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, கம்பம் பன்னீர் திராட்சை, நெகமம் காட்டன் சேலைகள், தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடு, ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கின்றது.

மேலும் தமிழ்நாடு 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடினை பெற்று இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் விவசாயப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சேலம் ஜவ்வரிசி போன்ற பொருட்களுக்கும் புவிசார் குறியீடு புதிதாக கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மாநிலம் விவசாயத்தில் முதலிடம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் புவிசார் குறியீடு பட்டியல்கள் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களும் விரைவில் புவிசார் குறியீடு பெற பதிவு செய்யப்படும்'' என்றார்.

''தஞ்சாவூர் மாவட்டத்தில், வீரமாங்குடி கிராமத்தில் செய்யப்படும் அச்சுவெல்லம், பேராவூரணி தென்னைக்கும் புவிசார் குறியீடு பதிவு செய்ய வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். அந்தப் பொருட்களும் புவிசார் குறியீடு பெற பதிவு செய்யப்படும் என்றும் டெல்டா மாவட்டத்தில் முன்னதாகவே 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது'' என்றும் தெரிவித்தார்.

மேலும் கும்பகோணம் வெற்றிலை, சீரகச் சம்பா அரிசி போன்ற பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். புவிசார் குறியீடு கிடைத்தால் தமிழ்நாட்டில் விளையக்கூடிய விவசாயப் பொருட்கள் அனைத்தும் உலக நாடுகளுக்கு தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்படும் என்றும், 2003ஆம் ஆண்டு புவிசார் குறியீடு சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 20ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளன என்றும்; தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடத்தைப் பெறுகிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 நிமிடத்தில் 14 இட்லி சாப்பிட்டு அசத்தல்.. பெற்றி பெற்றவருக்கு பரிசு என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.