கரோனா பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பொது இடத்தில் கூட்டமாக கூடுபவர்களை காவல் துறையினர் கண்டித்துவருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தியாக சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், திறந்த வெளியில் கறி சமைத்து வாழை இலையில் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அதை பேஸ்புக்கில் லைவ் செய்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் காவல் துறையினர், வீடியோ குறித்து விசாரணை நடத்தினர். அதில், விருந்திற்கு ஏற்பாடு செய்த சிவகுரு, சக்திவேல், சங்கர், மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரவை மதிக்காத வங்கி... ஊரடங்கை மீறிய வாடிக்கையாளர்கள்