தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மாவட்ட தி.மு.க செயலாளருமான துரை.சந்திரசேகரன் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
”தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்த துரை.சந்திரசேகரன், திருவையாறு அருகில் உள்ள ஆற்காடு கிராமத்தில் கரோனாவால் இறந்த ஒருவரை மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை கொடுத்துவிட்டதால் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு 3 வேலை உணவுக்கு அரசு 375 ரூபாய் வழங்கும் நிலையில், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சாப்பிட முடியாத அளவிற்கு உணவுகள் தரம் குறைந்துள்ளதாகவும், தஞ்சை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான இடப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கப் படுவதில்லை என்றும் கூறினார்.
பணியில் இருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுவதில்லை என்றும், தனியார் மருத்துவமனைகள் சில பேக்கேஜ் எனும் பெயரில் 5 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை முன்கூட்டியே வசூலித்து வருவதாகவும், சுகாதாரத்துறை இதை தடுக்காமல் உள்ளதால் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அவதிபடுவதாகவும் குற்றம்சாட்டியவர் தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.