ETV Bharat / state

"பணநாயகத்தின் அடிப்படையில் தேர்தல்" - ஜி.கே. வாசன் - காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறாமல் பணநாயகத்தின் அடிப்படையில் நடந்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

ஜிகே வாசன்
ஜிகே வாசன்
author img

By

Published : Mar 2, 2023, 1:52 PM IST

ஜிகே வாசன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பிரபல தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று (மார்ச்.2) கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன், தங்கவிலாஸ் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறாமல், பணநாயகத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது ஊர் அறிந்த ஒன்று. கடைசி ஓட்டு எண்ணும் வரை காத்திருந்த பிறகு தான் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தெளிவான முடிவு கிடைக்கும்.

மீனவர்கள் பிரச்னையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அனைவரையும் பாதிக்கும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வருத்தமான செய்தி. அவரது உடலை மத்திய வெளியுறுத்துறை அமைச்சகம் பாதுகாப்பாக அவரது இல்லத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். திரிபுரா, நாகாலாந்து மேகாலயா தேர்தல் முடிவுகளின் வாயிலாக பாஜக வளர்ச்சியை காணமுடிகிறது. இடைத்தேர்தல் என்பது வேறு, நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கை கைப்பற்றும் ஈவிகேஎஸ் ? - வெளியேறிய அதிமுக வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.