ETV Bharat / state

தமிழகத்தின் செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் அங்கீகாரம்! - மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை

தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பொருட்களுக்கு ஏற்கனவே மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழகத்தின் மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு

author img

By

Published : Jul 31, 2023, 4:50 PM IST

தமிழகத்தின் மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, அது 2002ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் புவிசார் குறியீடு பெறுவதற்குத் தகுதியுடையவை.

அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் தமிழகத்தின் செடி புட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் வழக்கறிஞர் சஞ்சய்காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் நகரத்தைச் சேர்ந்த நெசவாளர்களால் நெய்யப்படும் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜடேரி என்ற கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளாக அந்த பகுதி கிராம மக்கள் செய்து வரும் தொழிலான நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: இரட்டை சதம் அடித்த தக்காளி!... விலை குறையாததற்கு காரணம் என்ன?

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மருத்துவ குணமுடைய மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கு தற்போது புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 58 ஆகும். மேலும் 15 பொருட்கள் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெல்டா GI என்ற அமைப்பை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

அதன் மூலம் பதிவு பெற்ற புவிசார் குறியீடு பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல், வியாபாரத்தில் அதிக அளவில் வருமானத்தை ஈட்டுதல், தமிழக பொருட்களை உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வைத்தல்” ஆகியப் பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

செடி புட்டா சேலை: புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அம்சமாக செடி புட்டா சேலை என்பது கைத்தறி புடவை ஆகும். வெப்பமண்டல கால நிலைக்கு ஏற்றது. கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் இலகுவான வெப்பமாகவும் இந்த சேலை இருக்கும். சேலையில் கலைப்பட்டு மற்றும் பருத்தி நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வீரமாங்குடி செடி புட்டா சேலை
வீரமாங்குடி செடி புட்டா சேலை

ஜடேரி நாமக்கட்டி: ஜடேரி நாமக்கட்டி என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும், தமிழ்நாட்டிலிருந்து நாமக்கட்டிகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஜடேரி கிராமத்தின் முதன்மைத்தொழிலாக, விரல் நீளமுள்ள வெள்ளை களிமண் துண்டுகளாக நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த நாமக்கட்டிகள் ரசாயனம் எதுவும் பயன்படுத்தாமல், இயந்திரங்கள் உதவி இல்லாமல் கையால் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த நாமக்கட்டிகள் மருத்துவ குணம் உடையது.

திருவண்ணாமலை ஐடேரி நாமக்கட்டி
திருவண்ணாமலை ஐடேரி நாமக்கட்டி

கன்னியாகுமரி வாழைப்பழம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை சாகுபடி முக்கிய பயிர்களில் ஒன்றாக உள்ளது. மட்டி,செம்மட்டி, தென்மட்டி, மலைமட்டி, கதலி, ரசகதலி, செம்பருத்தி, ஆனைக் கொம்பன் ஆகியவை இப்பகுதியில் வாழையின் முக்கிய சாகுபடியாகும். இவற்றில் மட்டி வகை தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்கு பிரபலமானது. இந்தப் பழம் குழந்தைகளுக்கு உணவாக பயன்படுகிறது. மேலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ குணமும் உடையது.

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்
கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்

இதையும் படிங்க: "ஆளுநர் ரவியின் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை"- ஆளுநருக்கு நன்றி சொல்லும் அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.