தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கீர்த்திகா (22) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று (ஏப்.28) வழக்கம்போல பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருடைய பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். ஆனால், இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து பெண் உறவினர்களிடம் தெரிவிக்கவே, அதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், கொடிஅரசன், தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகிய நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 238/22, 294பி, 376டி, 506(1), எஸ்சி/எஸ்டி வன்கொடுமை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவில் யாராவது லிப்ட் கொடுப்பதாக சொன்னால், பெண்கள் நம்பி செல்ல வேண்டாம். நெருங்கிய உறவினராக இருந்தால், வீட்டில் தகவல் தெரிவித்த பின்னரே செல்ல வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூனத் அகமதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி