தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அணைக்கரை விநாயகன் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு சொந்தமான இடத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
இந்நிலையில், கரும்பு தோட்டத்தில் அன்பழகன் அவரது மனைவி பானுமதி, கொளஞ்சி அம்மாள், அனுப்பிரியா ஆகியோர் வேலை பார்த்துவந்துள்ளனர். அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அருகிலுள்ள இருப்பிடத்திற்கு அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் நான்கு பேரும் பலத்த காயம அடைந்தனர்.
பின்னர், அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே நேரத்தில் நான்கு பேரை மின்னல் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கடலூரில் மின்னல் தாக்கி இருவரும் மின்சாரம் தாக்கி ஒருவரும் மரணம்