அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, பொருளாளர் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.அறிவுராணி, வனரோஜா உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தஞ்சை மாவட்டத்தில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடியாக வசூல் செய்கிறார்கள்.
கூடுதலாக வட்டியும் வசூல் செய்வதோடு, கடன் கட்ட இயலாதவர்களை கடுஞ் சொற்களை பயன்படுத்தி, ஏளனமாகப் பேசி, பெண்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.
![மனு அளிக்க வந்த மாதர் சங்கத்தினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7526439_tnj.jpg)
அதுபோல திருவிடைமருதூர் பகுதியில், நுண்கடன் நிதி நிறுவனம் தொடர்ச்சியாக தொந்தரவு செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இன்று (ஜூன்-8) அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட நேர்முக உதவியாளர், ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: விளக்குக் கம்பங்கள் அமைக்காமலேயே திறந்துவைக்கப்பட்ட பாலம்!