ETV Bharat / state

கோயிலில் செயின் பறிப்பு - அடித்து உதைத்த பொதுமக்கள் - chain stole case in chennai

தஞ்சாவூரில் பக்தர்போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பக்தரின் செயினை திருடிய சக பக்தருக்கு தர்ம அடி

author img

By

Published : Nov 26, 2022, 2:30 PM IST

தஞ்சாவூர்: வெண்ணாற்றங்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் இன்று (நவ 26) சனிக்கிழமை என்பதால், பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் திரண்டனர்.

அப்போது தஞ்சை வண்டிக்கார தெருவைச் சேர்ந்த உமா, தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஏறினார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், உமா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமா கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் திருடிய நபரை கோயில் வளாகத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், மேற்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் திருடிய நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில் பக்தர்போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

இதையும் படிங்க: 100 கி.மீ. தூரம் சுரங்கப்பதை அமைத்து ரயில் என்ஜின் திருட்டு..? கிழக்கு மத்திய ரயில்வே விளக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.