தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளை பாதிக்கின்றவகையில் மத்திய, மாநில அரசுகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளித்து செயல்படுத்தவுள்ளது.
இதைக் கண்டிக்கும் வகையிலும் டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கறுப்பு பேட்ஜ் அணிந்து திடீரென சார் ஆட்சியர் முன்னர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கூட்டத்திற்கு முன்பும் இதேபோல கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சார் ஆட்சியர் அலுவலகத்திற்குள் விவசாயிகள் சென்றனர்.
இதையும் படிங்க: இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்