தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடியில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 37 நாட்களாக சாலையில் கிடந்து போராடுகின்றனர். கடும் குளிர், மழை, பனியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைக்குடியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அனைவரும் கருப்பு துண்டு அணிந்து புத்தாண்டு தினம் தங்களுக்கு கருப்பு தினம் என்று கூறினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.