தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சங்க செயலாளர் விமல்நாதன், "கடந்த ஆண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு வழங்கிய அதே 70 ரூபாய் ஊக்கத்தொகையை இந்தாண்டும் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது விவசாயிகளை ஏமாற்றும் செயல்.
கேரள அரசு நெல்லுக்கு ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு 980 ரூபாய் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகையையும் சேர்த்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். இதனை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நெல்லைத் தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குரூப் 4, குரூப் 2ஏ பணிக்கு இனி 2 எழுத்துத் தேர்வுகள்!