ETV Bharat / state

நில விவகாரம்: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அடாவடி! - etvbharat

பட்டுக்கோட்டை அருகே விற்பனை செய்த நிலத்தில் பாதை இருப்பதாக் கூறி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நிலத்தின் உரிமையாளரின் குடும்பத்தினரைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நிலத்தகராறால் கத்தியால் தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது புகார்

author img

By

Published : Jul 28, 2021, 10:39 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள இடையாத்தி மந்திக்கோன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். மந்திகோன் விடுதியிலுள்ள வீட்டில் அவரது தாய் செல்லம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவேல் என்பவர் பாரதிராஜாவுக்கு 5 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த இடத்தில் பாதை உள்ளதாகக் கூறி, அந்த இடத்தை தனக்கு தர வேண்டும் எனக்கூறி, பாரதிராஜாவின் தாயிடம் முத்துவேல் கேட்டுள்ளார்.

அதற்கு பாரதிராஜாவின் தாய், விற்பனை செய்த 5 சென்ட் நிலம் தான் உள்ளது. இதில் எப்படி உங்கள் இடம் இருக்கும் என்று கூறி இடத்தைத் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.

நில உரிமையாளர் குடும்பத்தைத் தாக்கும் முன்னாள் ஊராட்சி தலைவர்.

இதில் ஆத்திரமடைந்த முத்துவேல், பாரதிராஜாவின் தாயை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, வாட்டாத்திக் கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் முத்துவேல் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து பாரதிராஜா சென்னையிலிருந்து குடும்பத்துடன் மந்திக்கோன்விடுதிக்கு வந்து தாயாரை பார்த்து செல்ல வந்துள்ளார். அப்போது தனது தாயாரை தாக்கியது அறிந்து பாரதிராஜா, முத்துவேல் வீட்டுக்குச் சென்று நிலம் தொடர்பாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எனக்கு எழுதிக்கொடுத்த ஐந்து சென்டில் தான் நான் வீடு கட்டியுள்ளேன். மேலும் அதற்கான முழுத் தொகையையும் உங்களுக்கு செலுத்திவிட்டேன்.

அந்த இடத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. அப்படியிருக்க உங்களுடைய இடம் இங்கு எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். இதில் ஆவேசமடைந்த முத்துவேல் பாரதிராஜாவைத் தாக்கியதோடு, அவரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை அறுத்து, பாதி செயினை எடுத்து சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.

இதுபற்றி பாரதிராஜாவின் மனைவி சன்மதியின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கச் சென்றபோது, முத்துவேல் மற்றும் அவரது ஆட்கள் வழிமறித்து இருவரையும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தற்போது இருவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில், "என்னிடம் பணம் வாங்கி இடத்தை பத்திரம் செய்துகொடுத்துவிட்டு, தற்பொழுது எனது இடத்துக்கு பின்னால் உள்ள அவரது இடத்தில் பிளாட் போடவேண்டும் என்பதற்காக, என்னையும், எனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், பெண்களிடத்தில் அத்துமீறி செயல்பட்டுள்ளார். பண பலம், அரசியல் பலம் அவரிடம் இருப்பதால், எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.

தற்போது கத்திகுத்து வரை சென்றுவிட்டதால் வேறு வழியின்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருந்தும் முத்துவேல் தரப்பிலிருந்து எங்கள் குடும்பத்திற்குத் தொடர் அச்சுறுத்தல் வந்துகொண்டே இருக்கிறது.

எங்களது உயிரையும், உடமையையும் காக்க உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அனைவரும் சாவதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

இதையும் படிங்க: 'கரூர் பேருந்து நிலையத்தில் 5 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.