தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் பணிகள் திட்டம் செயலாக்கம், குறுவை சாகுபடி குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, விவசாயப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீர்வளத்துறை அமைச்சரிடம் வழங்கினர்.
இக்கூட்டத்தில் முன்னதாகப் பேசிய துரைமுருகன், "பொதுப்பணித் துறை அமைச்சராக மூன்று முறை நான் இருந்த போதுதான் தீராத காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பையும் வாங்கினோம். மேலும், அதே காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக சினிமா பாணியில் 'மீண்டும் கோகிலா' என்பதைப் போல் இப்போது மீண்டும் துரைமுருகன் வந்திருக்கிறேன். 92 அடி மேட்டூரில் தண்ணீர் இருந்தாலும் காவிரியில் அதைத் திறப்பதில் சின்ன பிரச்னை உள்ளது.
அங்கு தென்மேற்குப் பருவ மழை உருவாகி மழை பொழிவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அப்போது, காவிரியில் தண்ணீர் திறக்கலாம். கர்நாடகா அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. மேட்டூரில் தண்ணீர் இருக்கிறது என்று திறந்துவிட்டால் ஒரு போக சாகுபடி மட்டுமே சிறப்பாக நடக்கும். அடுத்த போகம் வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'ராஜா போல வாழனுமா...' - ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அட்வைஸ்!