தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய மாநில அரசின் செயல்பாடுகள் மீது தமிழ்நாடு மக்கள் முழுமையாக நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என்பதே இந்தத் தேர்தலின் வெற்றி. ஆனால் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தவறான பொய் பரப்புரைகள் இந்தத் தேர்தல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன.
திமுக வழக்குத் தொடர்ந்ததால்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு-வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வெற்றிக்காகப் பாடுபடும்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதால் பெற்றோர், மாணவர் மத்தியில் நம்பிக்கையை இழக்க நேரிட்டது. இதை கல்வித் துறை 100 விழுக்காடு ஊழல் இல்லாமல் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:'டிசம்பர் 30-க்குள் உள்ளாட்சித் தேர்தல் உறுதி!' - சொல்கிறார் திண்டுக்கல்லார்