ETV Bharat / state

தஞ்சையில் சிலம்பம் போட்டி.. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி!

author img

By

Published : Nov 27, 2022, 5:35 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது.

மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்களும், 30 நடுவர்களும் மற்றும் 25 சிலம்பப் பள்ளிகளும் பங்கேற்றன. இதில் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சிலம்ப போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.

இதையும் படிங்க: மழை வேண்டி பொம்மைக்கு செருப்படி.. தூத்துக்குடி மக்களின் விநோத வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.