தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திரைப்பட இயக்குநரும் நடிகருமான கெளதமன் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தச் சட்டம் கறுப்புச் சட்டம் என்பதால் 11 மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை மனதில் வைத்து இரவு பகலாகப் போராடும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு 12ஆவது மாநிலமாக இச்சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பேன்'