கும்பகோணத்தில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "மறைந்த முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவினார். இந்த சிலைக்கு காவி சாயமும் விபூதியும் அடிக்க முடியாது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது. திருவள்ளுவர் கருத்தை விபூதியால் மறைக்க முடியாது. அனைத்து மதத்தினரின் பொதுவான திருமறையாக திருக்குறள் உள்ளது.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதிமுக ஆட்சியில் தான் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிரப்புவார், என்பதை திமுகவினரும் பொதுமக்களும் அறிந்துள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும்" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை எப்போ வெளியாகப்போகுது தெரியுமா?