ETV Bharat / state

விமரிசையாக நடைபெற்ற தென் திருப்பதி பங்குனித் திருவிழா!

தஞ்சாவூர்: தென்னக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென் திருப்பதி பங்குனித் திருவிழா
author img

By

Published : Mar 31, 2019, 4:13 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பூலோக வைகுந்தம் திரு விண்ணகர் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலின் தற்போது பங்குனித் திருவிழா நடைபெற்றுவருகிறது.

இதனையொட்டி, மார்ச் 23 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் தேனப்பன் ஸ்ரீ பூமிதேவி திருத்தேரில் எழுந்தருளும் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து 'உப்பிலியப்பா உப்பிலியப்பா' என பக்த கோஷம் எழுப்பியவாறு நான்கு வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வந்தனர்.

தஞ்சாவூர் மார்ச் 31

 தென்னக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பூலோக வைகுந்தம் திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படும் உப்பிலியப்பன் திருத்தலத்தில் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் திருவிண்ணகர் என ஐந்து மூர்த்திகளாக நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்த வெங்கடாஜலபதி பெருமாள் பக்தர் களால் மிகப் பிரியமாக உப்பிலியப்பன் என்று அழைக்கப்படும் திருக் கோவிலில் பங்குனி மாத திருவிழா முன்னிட்டு 23.03.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய.முக்கிய நிகழ்ச்சியான  ஒன்பதாம் நாள் தேனப்பன் ஸ்ரீ பூமிதேவி திருத்தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து உப்பிலியப்பா உப்பிலியப்பா என்று நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.