தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் மகாதேவன், அமர்சிங், ராஜேந்திரன், அறிவழகன், முன்னாள் சேர்மேன் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆர்.எம். ராஜ், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விவசாயிகளை வதைக்கும் வேளாண் சட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஏர் கலப்பையுடன் திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் பேரணி சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் சித்திரவேல், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஞானமுருகன் உள்ளிட்ட 62 பேரையும் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கு; ஜனவரி 27 விடுதலையாகிறார் சசிகலா?