தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சின்னக்கண்டியூரைச் சேர்ந்தவர் சுரேஷ்(34). இவர் தனது சொந்த வீட்டில் பெட்டி கடை நடத்தி வந்தார். இந்த கடையை அவரது மனைவி சித்ராதேவி(28) நடத்திவருகிறார். கடந்த 9ஆம் தேதி சின்னகண்டியூரைச் சேர்ந்த நாகராஜன் மகன் வெங்கடேசன்(42) என்பவர் கடைக்கு வந்து முட்டை கேட்டார்.
அப்போது கடையில் இருந்த சித்ரா தேவி முட்டை இல்லை எனக் கூறியதால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் சித்ராதேவியை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் மனவேதனையடைந்த சித்ராதேவி, இதுகுறித்து தனது கணவர் சுரேஷிடம் கூறினார்.
இந்நிலையில், சுரேஷ் வெங்கடேசனிடம் கேட்டபோது வாய்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில், வெங்கடேசன் சுரேஷை சரமாரியாக அடித்து காயப்படுத்தினார். இதில், படுகாயமடைந்த சுரேஷ் உடனடியாக சுரேஷை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து சித்தராதேவி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஞானமுருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் நிலையம்!