தற்போது வங்கக்கடலில் புதிய ஃபானி புயல் உருவாகி இருப்பதை அடுத்து கடலோர கிராமங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். இருந்தும் கடந்த கஜா புயலில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
கஜா புயலின் தாக்கம் குறைந்து 5 மாதங்களே ஆகும் நிலையில் மீண்டும் ஒரு புயல் வந்திருப்பது மீனவர்கள் இடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. கடலோர காவல்படை போலீசார்கள், ஒலிபெருக்கி மூலம் மீனவ கிராமங்களில் உள்ள மக்களிடம் புயல் சின்னத்தைப் பற்றி எச்சரிக்கை விடுக்கும் விடுத்தும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.