ETV Bharat / state

Thanjavur: பருத்தி மற்றும் நெல் பயிர்கள் மழையில் மூழ்கி அழுகும் நிலை: பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் வேண்டுகோள் - thanjavur rain

கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பருத்தி மற்றும் நெல் பயிர்கள் வயலிலேயே சாய்ந்தது. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: பருத்தி மற்றும் நெல் பயிர்கள் மழையில் மூழ்கி அழுகும் நிலை: பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் வேண்டுகோள்

author img

By

Published : Aug 10, 2023, 4:50 PM IST

Thanjavur: பருத்தி மற்றும் நெல் பயிர்கள் மழையில் மூழ்கி அழுகும் நிலை: பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற விவசாயிகள் வேண்டுகோள்

தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாகப் பல நூறு ஏக்கரில் வயல் வெளிகளில் மழை நீர் வடிய வழியில்லாமல், தேங்கி நிற்கிறது. இதனால், அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி மற்றும் நெல் பயிர்கள் வயலிலேயே சாய்ந்து கிடப்பதால், பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்குப் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே பருத்திக்கு உரிய நியாயமான விலை கிடைக்கவில்லை என கூக்குரலிடும் விவசாயிகளுக்கு, இந்த மழை கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்தி, அவர்களது வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இதனை கணக்கெடுப்பு செய்து, விரைந்து அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என விரும்புகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக கோடை கால அக்னி நட்சத்திர வெயிலுக்கு இணையாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்ததுடன், இரவு நேரங்களிலும் கடும் புழுக்கம் நிலவி வந்தது.

இதையும் படிங்க: முன் அறிவிப்பின்றி விவசாய நிலங்களை அகற்றும் அரசு அதிகாரிகள்.....விவசாயி வேதனை

இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக திடீரென இரவு நேரங்களில், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மணி நேரங்கள் மட்டும் பலத்த மழை நீடித்தது. இந்த மழையின் எதிரொலியாக அசூர், கடிச்சம்பாடி, பறட்டை, தேவனாஞ்சேரி, கல்லூர் உள்ளிட்டப் பல கிராமங்களிலும் நேற்று இரவு மட்டும் பெய்த மழை பத்து செ.மீ ஆகப் பதிவாகியுள்ளது.

எதிர்பாராத இந்த திடீர் மழையால் பல நூறு ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருக்கும், பருத்தி, மற்றும் நெற்பயிர்கள் வயல்களில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் பயிர்கள் வயலில் உள்ள தண்ணீரில் சாய்ந்து கிடக்கிறது. குறிப்பாக, அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி செடிகளில் உள்ள பஞ்சு மழையில் நனைந்து கனத்துப் போய், செடியில் இருந்து வயலில் தேங்கியுள்ள மழைநீரில், உதிர்ந்து விழுகிறது.

ஏற்கனவே நெல்லுக்கும், பருத்திக்கும் நியாயமான மற்றும் கட்டுப்படியான நல்ல விலை கிடைக்கவில்லையே என புலம்பி வருகின்றனர், விவசாயிகள். தற்போது, எதிர்பாராத நேரத்திலான இந்த திடீர் மழை விவசாயிகளுக்கு மேலும் பல ஆயிரம் நஷ்டத்தை ஏற்படுத்தி வேதனையை அதிகரித்துள்ளது.

எனவே, மாநில அரசு, விரைந்து செயல்பட்டு கிராமம் வாரியாக கணக்கெடுப்பு செய்து, இதற்கான நிவாரணம் அளித்து, விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவிகள் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.