பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களின் சாலைகளிலும் பிரமாண்ட ஓவியங்கள் வரையப்பட்டுவருகின்றன.
அந்தவகையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலும் பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு ஓவியர் சங்கத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் சார்பில் பட்டுக்கோட்டை நகரில் உள்ள மணிக்கூண்டு பகுதி சாலையில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இதன் தடுப்பு நடவடிக்கைக்காக அயராது உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஓவியம் வரையப்பட்டது. இந்த ஓவியத்தில் விழித்திரு தனித்திரு, முகக்கவசம் அவசியம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: பொம்மலாட்டம் மூலம் கரோனா விழிப்புணர்வு: அசத்தும் ஓய்வு பெற்ற ஆசிரியர்!