தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கங்கேஸ்வரி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே. தாஜிதீன் தலைமையில் வகித்தனர்.
இதில், கரோனோ வைரஸ் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.கே. தாஜுதீன் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா முன்னெச்சரிக்கை: கடலுக்குச் செல்லாத மீனவர்கள்