கரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று (ஆக.15) ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 764 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் நேற்று ஒரே நாளில் 109 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 1,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 68ஆகவும், நேற்று ஒரே நாளில் 116 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: 19 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்த மலைகிராம மக்கள்!