தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) ஒரே நாளில் 125 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 6,610 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றனர்.
மேலும், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 93 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.