ETV Bharat / state

விளாங்குடி சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு! - விளாங்குடி சோதனை சாவடி

தஞ்சாவூர்: விளாங்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விளாங்குடியில் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு

author img

By

Published : Mar 20, 2020, 11:02 AM IST

திருவையாறு அருகே விளாங்குடி சோதனைச் சாவடியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், திருவையாறு தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், சுஜாதா, காவல் துறை அதிகாரி ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, ஊராட்சி மன்றத்தலைவர் கதிர்காமு, ஒன்றிய குழு உறுப்பினர் விஜயா ஆகியோர் முன்னிலையில், சுகாதார துறை இணை இயக்குநர் ராணி, மாவட்ட கொல்லை நோய் தடுப்பு அலுவலர் ஆடல் அரசி மற்றும் சுகாதார துறை அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தனர்.

அதன் பின்னர், வாகனத்தில் உள்ளவர்களிடம் சளி, இருமல், காச்சல் உள்ளதா என்று கேட்டு பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

விளாங்குடியில் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு

இதில் காவல் உதவி ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் இந்துமதி, ஊராட்சி செயலர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி தூய்மை காவலர்கள் என பலர் கலந்துகொண்டு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை செய்தனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.