உலகை உலுக்கும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மிகக் குறைந்த அளவு பணியாளர்களை வைத்து அரசுத்துறைகள் செயல்பட்டுவந்தன. அதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி தென்காசியிலிருந்து தஞ்சாவூர் கூடுதல் நீதிமன்றத்திற்கு தட்டச்சு பணிக்கு 36 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் அமர்த்தப்பட்டார். இதற்கிடையில், அவருக்கு கடந்த வாரம் தென்காசியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்முடிவில் அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக அப்பெண் நீதிமன்றத்தில் பணி செய்துவந்துள்ளார். அதனால் நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உபி.க்குத் திரும்பும் குடிபெயர்ந்தோரில் 22 விழுக்காட்டினருக்கு கரோனா!