தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலை விலக்கிக் கொள்ளும்படி மாணவர்களிடம் சமாதானப் பேச்சில் ஈடுபட்டனர். இருந்தும் மாணவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த மாணவர்களுக்கு ஆதரவாக இன்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெகு நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: பலூன் பறக்கவிட்டுப் போராட்டம்