தஞ்சாவூர்: 'குறள்நெறி செல்வர்' என அன்புடன் அழைக்கப்படும் திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூரில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த உபயதுல்லா, கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, திமுக அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
திமுகவில் தஞ்சாவூர் நகரச்செயலாளராக 27 ஆண்டுகள் பணியாற்றியதுடன், மாநில வர்த்தக அணித் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.கடந்த 2020ம் ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருதும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதும் வழங்கி, உபயதுல்லா கவுரவிக்கப்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று (பிப்.20) அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் உள்ள உபயதுல்லாவின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களின் தஞ்சாவூரில் உள்ள இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். pic.twitter.com/6fynvmld09
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களின் தஞ்சாவூரில் உள்ள இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். pic.twitter.com/6fynvmld09
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 21, 2023அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களின் தஞ்சாவூரில் உள்ள இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். pic.twitter.com/6fynvmld09
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 21, 2023
சென்னையில் இருந்து திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி சென்றடைந்தார். அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள உபயதுல்லா வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1இல் மாபெரும் பொதுக்கூட்டம்