ETV Bharat / state

"ஒரு சொட்டு தண்ணீர் கூட தராமல் தடுப்பது தான் கர்நாடக அரசின் நயவஞ்சக திட்டம்" - மணியரசன் சாடல் - மணியரசன்

Protest against mekedatu dam:தமிழகத்திற்க்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 5:42 PM IST

"ஒரு சொட்டு தண்ணீர் கூட தராமல் தடுப்பது தான் கர்நாடக அரசின் நயவஞ்சக திட்டம்" - மணியரசன் சாடல்

தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், தஞாவூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கர்நாடகத்திற்கு ஆய்வுக் குழுவை அனுப்பி காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு, மழைப்பொழிவு ஆகியவற்றின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்றும், ஹல்தர் ஆணையத்தை தமிழக அரசு புறக்கணித்து புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், குறுவை சாகுபடியில் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பயிர் கருகி உள்ளதாகவும், சம்பா, தாளடி சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் குடிதண்ணீரும் இல்லாத நிலை உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி தண்ணீரை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

"கிருஷ்ணராஜ சாகர் அணை, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற அணைகளிலிருந்து வெளிவரும் உபரி நீரையும் தடுத்து மேகதாது அணையில் தேக்கி கொண்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட மேட்டூருக்கு போகாமல் தடுப்பது தான் கர்நாடக அரசின் அனைத்து கட்சியின் நயவஞ்சக திட்டம், இதை கண்காணித்து தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மணியரசன், "ஏற்கனவே கலைஞர் காலத்தில் தான் எந்த வித அனுமதி இன்றி கர்நாடக அரசு பல அணைகள் கட்டப்பட்டது, அதேபோல் மேகதாதுவில் அணைகள் கட்டி விடுவார்கள். அமைச்சர் துரைமுருகன் அணை கட்ட முடியாது என்று நகைச்சுவையாக நடிக்கிறார். ஏற்கனவே கோட்டை விட்டது போல் இல்லாமல் சட்ட விரோதமாக அணைகட்ட துணை போக வேண்டாம்" என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் மணிமொழியன், ரமேஷ், செந்தில்வேலன், மதியழகன், மற்றும் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், தமிழ் தேச பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் வைகறை, பழ.ராசேந்திரன் உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் - போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.