திருவையாறு அடுத்த ராயம்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் விவேக்(29). இவர் மொபைல் ஆப் மூலம் பெங்களூரு பென்னாகள்ளி, கே.ஆர்.புரத்தில் உள்ள கிரெடிட் பீ என்ற நிறுவனத்தில் 15000 ரூபாய் பணம் கடன் பெற்றுள்ளார்.
அதற்கு வட்டியாக அதிக தொகை கேட்டு மிரட்டுவதாகவும், விவேக்கின் செல்போனில் உள்ள பெண்களின் எண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்வதாகவும், மொபைல் ஆப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவையாறு காவல் நிலையத்தில் கடந்த 10.01.2021 அன்று விவேக் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் விவேக் மைசூரில் உள்ள இ-ரூபி பைன்டெக் பிரேவேட் லிமிட்டேட் நிறுவனத்தில் 3000 ஆயிரம் ரூபாயும், டெல்லியில் உள்ள கேஸ்-பீன் மொபைல் ஆப் பிரேவேட் லிமிடெட் நிறுவனத்தில் 9500 ஆயிரம் ரூபாயும் கடன் பெற்றுள்ளார். அவர்களும் விவேக்கை மிரட்டுவதாக கொடுத்த புகாரின்பேரில் அந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:இளைஞரின் கண்களைக் கட்டி சராமரி தாக்குதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு!