ETV Bharat / state

தஞ்சாவூரில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவையாறு அருகே வெட்டாறில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

thanjavur
நீரில் மூழ்கி உயிரிழப்பு
author img

By

Published : Aug 2, 2021, 6:19 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த கரந்தை வளையல்கார தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது இரண்டு மகன்கள் பாஸ்கரன் (24), அபினாஷ் (23) ஆகியோர் நேற்று(ஆக.1) மாலை தனது நண்பர்களுடன் வெட்டாறு அணைக்கட்டு கிழக்குப் பகுதியில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றிலுள்ள சுழலில் சிக்கி இருவரும் மூழ்கியுள்ளனர். உடனடியாக, அவர்களுடன் சென்றவர்கள் தேடி பார்த்துள்ளனர்.

இருவரையும் கண்டுபிடிக்க முடியாததால், தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொது மக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி இளைஞர்களை மீட்டு வந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸூம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன், நடுக்காவேரி காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், இளைஞர்களின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ரமேஷ் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இந்நிலையில் அவரது இரண்டு மகன்களும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.