தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் அமைந்துள்ள செங்கமங்கலம் கிராமத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்துவருகின்றனர்.
இங்குள்ள தெற்கு தெரு பகுதியில் குடியிருப்புகளுடன், கிராம நிர்வாக அலுவலகம், பொது விநியோக கட்டடம், பால்வாடி ஆகியவை அமைந்துள்ளன. இங்கு மழைநீர் வெளியாவதற்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் வாய்க்கால் வழியாக மழைநீர் குளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு நடைபெற்ற சாலைப் பணியின்போது, பாலத்தை மூடியதால், மழை நீர் தேங்கித் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பலமுறை இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களின் பயன்பாட்டிற்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுக் கட்டப்பட்ட இந்தப் பாலத்தைக் காணவில்லை என்பது வேதனையடைய செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு உடனடியாக வாய்க்காலை சீரமைத்து, மறுபடியும் பாலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூன்று லாரியில் மணல் கடத்தல் - மூவர் கைது