ETV Bharat / state

மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்

தஞ்சை: காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார்.

author img

By

Published : Feb 1, 2020, 9:07 PM IST

மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்
மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்

தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து சுற்றுப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அவருக்கு கண் பார்வை சரியாகவில்லை. இதனால் மருத்துவர்கள் வழங்கிய மூக்குக் கண்ணாடியை அணிந்துள்ளார்.

மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்

இருந்தும், புத்தகத்தைப் படிக்க முடியாத சூழல் உள்ளதால் சின்ராசு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், அவரிடம் இருந்த கண்ணாடியும் உடைந்து போகவே பணம் இல்லாததால் புது கண்ணாடி வாங்கமுடியாமல் உள்ளார். இந்நிலையில் தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் யாரேனும் சிகிச்சை பெற உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே கிக்... ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

Intro:காயமடைந்து பார்வை பறிபோனநிலை-மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்

Body: தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குட்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் தினக்கூலி. அன்றாடம் கூலி வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி வருகிறார். இவருடைய மகன் சின்ராசு வயது12. அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்த பொழுது கீழே விழுந்த நிலையில் கண் பார்வை பறி போனது. இதையடுத்து சுற்றுப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு சரியான பார்வை வரவில்லை. இதனால் டாக்டர்களால் அதற்கென பரிந்துரைக்கப்பட்ட மூக்குக் கண்ணாடியை அணிந்து அதன்மூலம் ஓரளவுக்கு அதாவது பெரிய உருவங்கள் மட்டும் தெரிகின்ற நிலையில் நடமாடி வருகிறார். இருந்தும் புத்தகத்தைப் படிக்க முடியாத சூழல் உள்ளதால் அவன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். மேலும் இருந்த கண்ணாடியும் உடைந்து போகவே வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை அவனுக்கு இருந்து வருகிறது. அந்த கண்ணாடியை மாற்ற கூட பணம் இல்லாததால் ஒரு பக்கம் உள்ள கண்ணாடியை வைத்து தனது வீட்டை சுற்றி மட்டுமே அவனால் செல்ல முடிகிறது. இந்நிலையில் தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. அதற்கு மேல் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் தனது தந்தை வறுமையில் உள்ளதால் மேல் சிகிச்சை செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே எனக்கு யாரேனும் சிகிச்சை பெற உதவினால் நான் கண் பார்வை பெற்று மீண்டும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியும் யாராவது எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று மனமுருக கூறுகிறான்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.