ETV Bharat / state

பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தி மத மோதல்களை ஏற்படுத்திட முனைகிறது பாஜக - முத்தரசன் - மின்திருத்த மசோதா

ஆண்டிற்கு ஒரு முறையோ, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியை தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்திட திட்டமிட்டு, அதன் வாயிலாக நாட்டில் மத மோதல்களை ஏற்படுத்திட பாஜக முனைகின்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தி மத மோதல்களை ஏற்படுத்திட முனைகிறது பாஜக

author img

By

Published : Oct 3, 2022, 7:57 PM IST

கும்பகோணம் தனியார் விடுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 'தமிழ்நாடு முழுவதும், ஏற்கெனவே திட்டமிட்டபடி, மத நல்லிணக்கம், சமூக நீதி காக்க, சாதி, மத மோதல்களை தடுத்து நிறுத்திட, மதச்சார்பின்மையை காப்பாற்ற, சமூக அமைதி காக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மனிதச்சங்கிலி வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெறும்.

மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்பினரும் பங்கேற்கின்றனர். இதில் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இனி நிறைவேற்றப் போவதும் இல்லை.

இதனை மறைக்கவும், அவர்களுக்குரிய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, நாடாளுமன்றத்தில், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மக்களுக்கு எதிரான பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனை மறைக்கவும், இதனை திசை திருப்பவும், தற்போது நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறையோ, மூன்று ஆண்டுளுக்கு ஒரு முறையோ நடத்திய ஆர்எஸ்எஸ் பேரணியை தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்திட திட்டமிட்டு, அதன் வாயிலாக நாட்டில் மத மோதல்களை ஏற்படுத்திட முனைகின்றன.

பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தி மத மோதல்களை ஏற்படுத்திட முனைகிறது பாஜக

மின்திருத்த மசோதா மூலம் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயன்று வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், புதுச்சேரியில் நடைபெறுவது பாஜக கூட்டணி அரசு என்பதால் அங்கு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனைக்கண்டித்து அங்குள்ள மின்துறை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை, சங்கங்களை கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். இதனை அங்குள்ள ஆளுநர் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என மிரட்டி வருகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் மின்துறை ஊழியர்கள் அஞ்சமாட்டார்கள். எதையும் எதிர்கொள்ள தொழிலாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தரமான கல்வியை தராமல் போனதே திராவிட மாடல்" - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.