தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனால் குறைந்தளவில் மட்டுமே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர், மகா நந்திக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வழக்கமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் பிரதோஷ வழிபாட்டில் இம்முறை குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நில அபகரிப்பில் சிக்கித் தவிக்கும் பழங்குடிகள் - பலநாள் வேதனை தீர்க்கப்படுமா?