மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தனியார் வங்கிகள் தவணை கடன் வழங்குகிறது. இதில் கடன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், தினந்தோறும் தினக்கூலி வேலை பார்த்து தவணை முறையில் கடனைச் செலுத்தி வருவதோடு, அந்த குறிப்பிட்ட தொகையை வைத்துதான் குடும்பச் செலவை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் வறுமையில் தவித்துவருகின்றனர். அரசு அனைத்து வங்கிக் கடன்கள் முன்று மாத காலத்திற்குத் தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்திருந்தது.
இருப்பினும் தனியார் வங்கிகள் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வீடுகளுக்குச் சென்று தவனையை உடனே செலுத்துமாறு தொந்தரவு செய்வதாக பட்டுக்கோட்டை பாரதி சாலை பகுதியில் வசிக்கும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மூன்று மாத காலத்திற்கு தவணை செலுத்த வேண்டியதில்லை என்று கூறியிருக்கும் நிலையில், வங்கி ஊழியர்கள் உத்தரவை மீறியிருப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை நெட்டி, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!