தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யம்பேட்டையில் வாழைத்தார்கள் ஏலம் விடும் சந்தை அமைந்துள்ளது. இங்கு கணபதி அக்ரஹாரம், மணலூர், இலுப்ப கோரை, உள்ளிக்கடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வாழைத்தார்கள் வியாபாரத்திற்காக கொண்டுவரப்படுகிறது.
இதில் பூவம் பழம், கற்பூரவள்ளி, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்களை ஏலத்திற்காக சந்தைக்குக் கொண்டுவருகின்றனர்.
இதில் உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள்வரை ஏலத்தில் பங்கேற்று வியாபாரத்திற்காக வாழைத்தார்களை கொள்முதல் செய்கின்றனர். மேலும், ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை ரூ.400 லிருந்து ரூ.500 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : விவசாய பணிகளுக்கு கூலி உயர்வு: கூலியாட்கள் கொண்டாட்டம், விவசாயிகள் பாடு திண்டாட்டம்!